பூஜா ஹெக்டே

சரிலேறு நீக்கேவரு திரைப்படத்துக்கு வரலாற்று சிறப்பு வாய்ந்த கொண்டா ரெட்டி கோட்டையின் செட் ஒன்றை அமைத்துள்ளனர். ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு அழகி தமன்னா உடன் மிகவும் உற்சாகமாக நடனமாடியுள்ளார் மகேஷ் பாபு.

தற்போது இந்த படத்தில் இடம்பெறும் மற்றொரு சிறப்பு பாடலுக்காக நடிகை பூஜா ஹெக்டே நடிகை மகேஷ் பாபுவுடன் இணைந்து ஆடப்போவதாக தகவல்.

அனில் ரவிப்புடி இயக்கத்தில் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து கொண்டிருக்கும் அடுத்த என்டர்டெய்ன்மென்ட் திரைப்படம் சரிலேரு நீக்கேவரு.

ஆர்மி மேஜராக நடிக்கும் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் இவர்கள் இருவரும் இணைந்து ரொமான்ஸ் செய்கிறார்கள் என்பது செய்தி.

படத்தின் முக்கியமான காட்சிகள் காஷ்மீரின் அழகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் ஆடம்பரமான செட்கள் அமைக்கப்பட்டு படத்தின் பாடல் காட்சிகளும் சண்டை காட்சிகளும் முடிக்கப்பட்டுள்ளன.

கொண்டா ரெட்டி கோட்டையின் செட் ஒன்றை அமைத்துள்ளனர். இந்த கொண்டா ரெட்டி கோட்டை செட்டில் தான் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒக்கடு திரைப்படத்தில் இடம்பெற்ற க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது.

அந்த படம் மாபெரும் வெற்றி பெற்று மகேஷ் பாபு தெலுங்கு படவுலகின் முன்னணி நாயகனாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு சிறப்பு பாடலுக்காக மகேஷ் பாபுவுடன் கைகோர்க்கவுள்ளார் பூஜா ஹெக்டே.

இருவரும் ஏற்கெனவே ஜோடி சேர்ந்து மகரிஷி படத்தில் வருண் தேஜின் கடலகொண்ட கணேஷ் எனும் பாடலில் நடனமாடியுள்ளனர்.

பூஜா ஹெக்டே பிரபாஸுடன் இணைந்து ஜான் திரைப்படத்திலும் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ஆல வைகுந்தபுரம்லு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.