பிகில்

தளபதி நடித்து வெளியாக உள்ள படம் பிகில். தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜய் மற்றும் அட்லீ கூட்டணி இது வரை வெற்றி கூட்டணியாக இருந்து வருகிற நிலையில், பிகில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் படம் தொடர்பில் சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வெளியான ட்ரைலர் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து உள்ளது. படத்தின் பிரமாண்டம் ட்ரைலரிலேயே தெரிந்தது.

பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் சிறப்பு காட்சிகளுடன் திரையிடப்படுவது வழக்கம். அதே போல தான் பிகில் படமும் திரையிடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, பிகில் படத்தில் மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி ரசிகர்களுக்கு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

பெரிய பட்ஜெட் படம் என்பதால் அதிகாலை காட்சியும் போட வேண்டும் என்று படக்குழு திரையரங்க உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.