நடிகர் – நடிகைகளின் வலைத்தளங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும்.

எனவே இதை ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். அந்த வகையில் நடிகை திரிஷாவின் ட்விட்டர் பக்கத்தை பின் தொடர்வோர் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதுவரை எந்த தமிழ் நடிகைக்கும் இந்த அளவிற்கு பின் தொடர்வோர் எண்ணிக்கை இல்லை. எனவே முதல் முறையாக இந்த சாதனையை திரிஷா நிகழ்த்தியுள்ளர்.

இதற்காக அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.