Editor's Picks எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சைரா டீசர்

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சைரா டீசர்

-

- Advertisment -

தெலுங்கில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

தமிழ் திரைப்படங்களைப் பொறுத்த வரையில், வரலாற்று கதையை வைத்து படங்கள் எடுக்கும்போது அவற்றுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனாலும், அப்படிப்பட்ட படங்களை பெரிய அளவில் எடுக்க யாரும் முன் வருவதில்லை. காரணம், பட்ஜெட் தான்.

இருந்தாலும், பிற மொழிகளில் எடுக்கப்பட்ட படங்கள் இங்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸாகின்றன. அந்த வகையில் தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி என்ற படம் தற்போது மிகப் பிரம்மாண்டமாக, அதிக அளவிலான பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில், நடிகர் சிரஞ்சீவி பிரதான கேரக்டரில் நடித்திருக்கிறார்.
அமிதாப்பச்சன், நயன்தாரா, கஜபதி பாபு, தமன்னா, நஹாரிகா, விஜய் சேதுபதி, கிச்சா சுதீப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தை ராம் சரண் தயாரிக்க, சுரேந்தர் ரெட்டி இயக்கி இருக்கிறார்.

இந்தப் படத்துக்கான டீசர் வெளியாகி உள்ளது. அந்த டீசர் 1.42 நிமிடம் மட்டுமே ஓடுகிறது.

டீசர் முழுவதும் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடக்கும் போர்க்காட்சிகள் இடம் பெற்றுள்ளனர். டீசரின் அநேக இடங்களிலும் சிரஞ்சீவியே ஆக்ரமித்திருக்கிறார். இந்த வயதிலும் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

நடிகர் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நடிகை நயன் தாரா, தமன்னா உள்ளிட்டோர், டீசரில் ஆங்காங்கே தென்படுகின்றனர். டீசர் வெளியான சில மணிநேரங்களில் டிரெண்ட்டிங்கில் இடம் பெற்றது.

இதயும் பாருங்க!

ரஞ்சித்தை இணைத்து கொண்ட பிரபல கட்சி!

அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறிவிட்டு அதே அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை தன்னால் ஏற்று கொள்ள முடியவில்லை என்று ரஞ்சித் பரபரப்பாக பேட்டி அளித்திருந்தார் இந்த நிலையில் நேற்று பாமகவில் இருந்து விலகிய...
video

முதலில் பழம், இப்போ பால்

தமிழ் சினிமாவில் ‘களவாணி’ படம் மூலம் அறிமுகமான ஹீரோயின் ஓவியா. இதனையடுத்து ‘முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலகப்பு’ என சில படங்களில் நடித்தார். ஆனாலும், விஜய் டிவி-யில் வந்த ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி...

No time to die

No time to die : Recruited to rescue a kidnapped scientist, globe-trotting spy James Bond finds himself hot on the trail of a mysterious...

வெளியில் வந்த மீரா மிதுனுக்கு இப்படியொரு வாய்ப்பா

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று ஆரம்பத்தில் இருந்தே சசர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தவர் மீரா மிதுன். அதிலும் சேரன் மீது அவர் அபாண்டமாக பழி சுமத்தியதால் பார்வையாளர்களால் வெறுக்கப்பட்ட மீரா மிதுன், பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள்...

எல்லாருமே நண்பர்கள் தான்! மீராவிடம் லாஸ்லியா பளிச்

பிக்பாஸ் முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் மாடல்...

‘காப்பான்’ முக்கிய அறிவிப்பு

சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மோகன்லால் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக...

காதலை உறுதி செய்த த்ரிஷா!

நடிகை த்ரிஷா நடித்துள்ள ராங்கி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது, அவர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது, ஒருவர் உங்களது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்னவென்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த...

ராஜா ராணி சீரியல் படப்பிடிப்பு இனிமேல் இங்கு இல்லையா?

சீரியல்களில் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது ராஜா ராணி. இதில் நடிக்கும் போது ரீல் ஜோடியாக இருந்தவர்கள் இப்போது ரியல் ஜோடியாக மாறிவிட்டனர், யாரை சொல்கிறோம் என்றால் சஞ்சீவ்-ஆல்யா மானசாவை தான். இருவரும் தொடர்ந்து ஜோடியாக...

நடிகை கார் மோதி விபத்து

தெலுங்கு நடிகை ராஷ்மி கவுதம் வந்த கார் மோதி ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் சாந்தனு நடித்த கண்டேன் மற்ரும் மாப்பிள்ளை விநாயகர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை ராஷ்மி...

பிகினியில் கிறங்கடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது வாய்ப்புகள் குறைந்துள்ள ரகுல் ப்ரீத் சிங் அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாலிவுட்டைச் சேர்ந்த நடிகைகள் தான் அப்படி அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you