தளபதி 64

விஜய் நடக்கும் தளபதி 64 படத்தில் புதிய வரவாக மாளவிகா மோகனன் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிகில் படம் குறித்த எதிர்பார்ப்பை விட, தளபதி 64 படத்திற்குத்தான் எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது.

தளபதி 64 படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியாக உள்ளது. அடுத்த வருடம் மே மாதம் இந்த படம் வெளியாகும்.

கடந்த வாரம் இந்த படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி அறிவிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை தொடர்ந்து தினமும் இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்த விவரம் வெளியாகும் என்று கூறப்பட்டது

அதன்பின் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் இந்த படத்தில் இன்னொரு வில்லனாக வருவார் என்றும் அறிவிப்பு வெளியானது. நேற்று மதியம் இந்த படத்தில் நடிகர் சாந்தனு இணைந்துள்ளார் என்றும் அறிவிப்பு வெளியானது.

தற்போது தளபதி 64 படத்தில் புதிய வரவாக மாளவிகா மோகனன் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. பல நாட்களாக கிசுகிசுக்கப்பட்ட இந்த விஷயம் அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.

தளபதி 64

கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகனன் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பட்டம் போலே படம் அங்கு பெரிய ஹிட் அடித்தது. பேட்ட படத்தில் சசிகுமார் மனைவியாக இவர் நடித்தார்.

இவரின் இன்ஸ்டா புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலாகி வந்தது. இவர் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதனால் தமிழில் திடீர் என்று இவர் பெரிய அளவில் வைரலானார்.