விஜய்

தீபாவளி தினத்தில் விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் வெளியாகவுள்ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில் அதே தினத்தில் கார்த்தி நடித்த ’கைதி’ திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ திரைப்படம் தீபாவளிக்கு முன்பு வெளியாக வாய்ப்பில்லை என்றும், தீபாவளி அன்று விஜய் மற்றும் கார்த்தி படங்களுக்கு இடையே மோதவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே இந்த செய்தி உறுதி செய்யப்படும்.

விஜய்யின் பிகில், கார்த்தியின் ’கைதி’ மற்றும் விஜய் சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ ஆகிய மூன்று படங்கள் திரைப்படங்கள் தீபாவளி அன்று மோதினால், தளபதி 64 திரைப்படக்குழுவினர் மோதுவதாக அர்த்தம் கொள்ளப்படும்.

அதாவது ’தளபதி 64 திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் ’கைதி’ படத்தின் இயக்குநர் என்பதும், தளபதி 64 படத்தின் வில்லன் விஜய்சேதுபதி தான் ’சங்கத்தமிழன்’படத்தின் ஹீரோ என்பதும் குறிப்பிடத்தக்கது.

’தளபதி 64; படத்தில் இணைவதற்கு முன்பே தீபாவளியன்று மூவரும் ஒரே நாளில் மோத உள்ளமை ரசிகர்களுக்கு த்ரில்லான அனுபவமாக நிச்சயம் இருக்கும்.