Movie Reviews பக்ரீத் விமர்சனம்

பக்ரீத் விமர்சனம்

-

- Advertisment -

நடிகர் -விக்ராந்த்
நடிகை-வசுந்தரா காஷ்யாப்
இயக்குனர்-ஜெகதீசன் சுபு
இசை-இமான்
ஓளிப்பதிவு-ஜெகதீசன் சுபு

நாயகன் விக்ராந்த் சில போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த நிலத்தை வைத்து விவசாயம் செய்ய நினைக்கிறார். இதற்காக வங்கி கடனுக்காக அலைகிறார். பொருளாதார நெருக்கடியில் இருக்கும் விக்ராந்துக்கு அவரது மனைவி வசுந்தராவும், மகள் ஷ்ருத்திகாவும் தான் உலகம்.

ஒருநாள் கடன் கேட்பதற்காக இசுலாமியர் வீட்டுக்கு செல்லும் போது பக்ரீத்துக்காக கொண்டு வரப்பட்ட ஒரு ஒட்டகத்தின் குட்டியை இரக்கப்பட்டு வீட்டுக்கு கொண்டுவருகிறார் விக்ராந்த். அந்த ஒட்டகம் அவர்களது குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிடுகிறது.

இந்நிலையில், ஒட்டகத்திற்கு உடல் நலம் சரியில்லாமல் போக, விலங்கு நல மருத்துவர் எம்.எஸ்.பாஸ்கர் அறிவுரையால் திரும்ப ராஜஸ்தானில் ஒட்டகங்களுடன் ஒட்டகமாக விட்டுவிட செல்கிறார் விக்ராந்த்.

இந்த பயணத்தில் விக்ராந்த் சில இன்னல்களை சந்திக்கிறார். இதையெல்லாம் கடந்து ஒட்டகத்தை சேர்த்தாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ராந்த், எதார்த்தமான நடிப்பால் மனதில் நிற்கிறார். கடனுக்காக அலைவது, மகளுடன் பாசத்தை காட்டுவது, ஒட்டகம் மீதான அன்பு, அதை பிரிந்த பின்னர் பரிதவிப்பு என நடிப்பில் பளிச்சிடுகிறார். இப்படம் விக்ராந்திற்கு பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் வசுந்தரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல காட்சிகளை சாதாரணமாக செய்து விட்டு செல்கிறார். ஒரு விவசாயி மனைவியாக சிறப்பாக பிரதிபலித்துள்ளார். பேபி ஷ்ருத்திகாவின் நடிப்பால் படம் நமக்கு இன்னும் நெருக்கமாகிறது.

விக்ராந்தின் நண்பராக தினேஷ், லாரி டிரைவராக வரும் ரோகித் பதக், லாரி உதவியாளராக வரும் மோக்லி, ஆகியோர் திரைக்கதையோட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கிறார்கள். ஒட்டகத்தை விற்று காசு பார்க்கலாம் என்ற ஆசையில் அதை ஏற்றிவிட்டு அதனால் தொல்லைகளுக்கு ஆளாகும் ரோகித் சிரிக்க வைக்கிறார்.

அன்பை மட்டுமே பிரதானமாக எடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன் சுபு. குறிப்பாக கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.

விலங்குகளை வைத்து படம் எடுக்க ஒரு தைரியம் வேண்டும். அதுவும் இந்த படத்தில் ஒட்டகத்திடம் வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர். படம் பார்க்கும் போது, நம்மளுடைய செல்ல பிராணிகளுடன் நாம் இருப்பதை பல இடங்களில் நினைவு படுத்துகிறார்.

ஒட்டுமொத்தமாக விலங்குகள் மீதான பேரன்பை பக்ரீத் பேசியிருப்பது சிறப்பு. அதை வெறும் ஆவணமாக பதிவு செய்யாமல் நம்மையும் சாராவோடு சேர்ந்து பயணிக்க வைத்ததில் ஜெகதீசன் சுபு கவனிக்க வைக்கிறார்.

படத்தின் இன்னொரு நாயகன் இமானின் இசை தான். கதாபாத்திரங்களின் உணர்வுகளை இசையால் கடத்துகிறார். ஆலங்குருவிகளா, லக்கி லாரி, கரடு முரடு ஆகிய பாடல்களும் முன்பே வெளியாகி ஹிட் அடித்து விட்டன.
தமிழ்நாட்டின் வயல்புறம் முதல் ராஜஸ்தான் பாலைவனம் வரை ஜெகதீசன் சுபுவின் ஒளிப்பதிவு நம்மையும் சேர்த்து பயணிக்க வைக்கிறது.

மொத்தத்தில் ‘பக்ரீத்’ குடும்பங்களின் கொண்டாட்டம்.

இதயும் பாருங்க!

136 பயணிகளுடன் ஆற்றுக்குள் சென்ற விமானம் !

அமெரிக்காவில் 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் புளோரிடா ஆற்றில் விழுந்தது. போயிங் 737 ரக விமானம் கியூபாவின் குவாண்டனமோ என்ற விமான நிலையத்தில் இருந்து புளோரிடாவில் உள்ள ஜாக்சன்விலே விமான...

பிகில் வெளியீட்டில் சிக்கல் இருக்காது

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குறித்து, நடிகர் விஜய் தமிழக அரசை மறைமுக சாடினார். அதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், விஜய்யின்...

காவல்துறைக்கு பயந்து தலைமறைவாகிய நடிகர் விமல்

நடிகர் விமல் காவல் துறையினருக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாககூறப்படுகிறது. 'களவாணி', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். இவர், சென்னை விருகம்பாக்கம் பாக்சர் காலனியில் உள்ள தனியார்...

சங்கரதாஸ் அணி வேட்புமனு தாக்கல்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவுளட்ளதுடன், கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும்...

முகப்பருக்களில் இருந்து விடுபட சிம்பிள் டிப்ஸ்!

ஆண்களின் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி, பரு பிரச்சனைகளை போக்க எளிய வழிமுறைகள். பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் சற்று கடினமானது தான். ஆனால், இதனை நம்மால் எளிதாக பருக்கள் இல்லாமலும், கரும்புள்ளிகள் இல்லாமலும்...

‘ஆணுறுப்பை வெட்டுங்கள்’ – ஆவேசப்பட்ட யாஷிகா!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ்நாட்டு சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான யாஷிகா ஆனந்த், பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்கள் பற்றி கடும் கோபத்துடன் இன்ஸ்டாகிராமில் பேசியுள்ளார். கர்நாடகாவில் இன்ஜினியரிங் கல்லூரி...

மக்களவை தேர்தல் 2019 : இதுவரை பதிவான வாக்கு சதவீத இறுதி நிலவரம் !

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மக்களவை தேர்தலில் இதுவரை பதிவான வாக்கு சதவீத இறுதி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் –...

காதலியை 12 ஆண்டுகளுக்கு பின் மணந்த டுவெய்ன் ஜான்சன்

மல்யுத்த போட்டி மூலமாக ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான டுவெய்ன் ஜான்சன் எனும் 'ராக்' பின்னாளில் ஹாலிவுட் நடிகராக மாறி திரைப்படங்களிலும் தனது அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில் கடந்த...

மனைவியை பிரிந்தாரா நடிகர் இம்ரான்கான் !

பாலிவுட் சினிமாவில் முன்னனி நடிகர் இம்ரான்கான், அவந்திகா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணம் ஆகி 8 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது நடிகர் அமீர்...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you