Movie Reviews கென்னடி கிளப்

கென்னடி கிளப்

-

- Advertisment -

நடிகர்-சசிகுமார்
நடிகை-மீனாட்சி கோவிந்தராஜன்
இயக்குனர்-சுசீந்திரன்
இசை-இமான்
ஓளிப்பதிவு-குருதேவ்

ஓய்வு பெற்ற ராணுவ வீரராக இருக்கும் பாரதிராஜா, கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கபடி பயிற்சி அளித்து, அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். அப்படி பயிற்சியளித்த குழந்தைகளில் ஒருவர் சசிகுமார்.

மேலும் இதே கிராமத்தில் உள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்த ஒரு பத்து பேரை தேர்வு செய்து சிறந்த வீராங்கனைகளாக்கும் முயற்சியில் கபடி பயிற்சி கொடுத்து வருகிறார் பாரதிராஜா. ஒரு கட்டத்தில் பாரதிராஜாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது.

இதனால் வீராங்கனைகளுக்கு சசிகுமாரை பயிற்சி அளிக்கும் படி பாரதிராஜா கேட்க, அவரும் சம்மதித்து திறமையாக பயிற்சி அளித்து பல போட்டிகளில் விளையாடி வெற்றி பெறக்கூடிய சிறந்த அணியாக உருவாக்குகிறார். இந்நிலையில், இந்த குழுவில் இருக்கும் பெண், இந்திய அணியில் விளையாட தேர்வாகிறார்.

ஆனால் மேல் பொறுப்பில் இருக்கக்கூடிய முரளி ஷர்மா 30 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் தான் அந்த டீமில் விளையாட முடியும் என்று கூறுகிறார். இதனால் மன வேதனை அடையும் அந்த பெண், விபரீத முடிவு எடுக்கிறார்.

இறுதியில் அந்த பெண் எடுத்த முடிவு என்ன? பாரதிராஜா, சசிகுமார் இருவரும் இதை எப்படி கையாண்டார்கள்? இந்திய அளவில் கபடி வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஓய்வு பெற்ற ராணுவ வீரராக நடித்திருக்கும் பாரதிராஜா, கிராமத்தில் வறுமையில் இருக்கக்கூடிய குடும்பங்கள் தலைதூக்க வேண்டும் என்பதற்காக அந்த வீட்டுப் பெண்களை கபடி விளையாட வைத்து, அவர்களின் குடும்பம் உயர பாடுபடும் கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார்.

அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் இன்றைய விளையாட்டுத்துறையில் இருக்கக்கூடிய அவலங்களை அப்பட்டமாக தோலுரித்துக் காண்பிக்கிறது.

சசிகுமாரின் தோற்றம் மிகவும் அழகாக இருக்கிறது. பாரதிராஜாவும் இவரும் படத்தில் அப்பா மகன் போல வந்தாலும் இருவருக்குள்ளும் ஒரு உரசல் வந்துகொண்டே இருக்கிறது. அந்த உரசலை மிக அழகாக கையாண்டிருக்கிறார் சசிகுமார்.

குறிப்பாக படத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக இவர் பேசும் வசனங்கள் மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ளது. அதை இவர் பேசும்போது மிக சிறப்பாக உள்ளது. இப்படத்தில் இவருக்கு நாயகி எதுவும் இல்லை என்றாலும் அதைப் பற்றி சிந்திக்கவே வாய்ப்பில்லாமல் மிக சிறப்பாக செய்திருக்கிறார்.

ஒரு கபடி பெண்கள் டீமுக்கு பயிற்சியாளராக வருகிறார் சூரி. சிறிது நேரம் வந்தாலும் மனதில் நிற்கும் படியாக செய்திருக்கிறார் அதேபோல் திருமணம் செய்த அன்றே தன் மனைவியைப் கபடி போட்டிக்கு அனுப்பி வைக்கும் இளைஞரும் மனதில் நிற்கிறார்.

உயர் பதவியில் இருக்கக்கூடிய ஒருவர் பணத்திற்காக எதையும் செய்யும் கதாபாத்திரத்தில் முரளி ஷர்மா நடித்திருக்கிறார். படத்தை பார்க்கும் போது, இவர் மீது கோபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

கபடி வீராங்கனைகளாக நடித்திருக்கும் நடிகைகள் அவரவர் கதாபாத்திரத்தை மிகவும் திறம்பட செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுடைய பதிவை அழகாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் சுசீந்திரன் கபடி போட்டி மையப்படுத்தி கிராமத்து பெண்களை ஒருங்கிணைத்து ஒரு எளிமையான கதையை மிக அழகாக சொல்லி இருக்கிறார். படத்தில் அனைத்தும் எதார்த்தமான காட்சிகளாக பதிவு செய்திருப்பது சிறப்பு.

வீராங்கனைகளை தேர்வு செய்து இருப்பதிலேயே பாதி வெற்றி கண்டிருக்கிறார். களத்தில் விளையாடும் வீரர்களின் மனநிலையை பாரதிராஜா, சசிகுமார் இவர்களுக்கு இடையிலான உரசலினால் வீரர்கள் மனநிலை பாதிக்கப்படும் என்பதை சுசீந்திரன் கொஞ்சம் சிந்தித்து காட்சி கொடுத்திருக்கலாம்.

இறுதிப் போட்டியில் இருக்கக்கூடிய வீரர்கள் பயிற்சியாளர்கள் மனநிலை மாறி இருக்கும் போது வெற்றி பெறுவது கடினம். இது விளையாட்டு வீரர்களுக்கு நன்கு புரியும்.

இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். குருதேவ்வின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘கென்னடி கிளப்’ குட் கேம்.

இதயும் பாருங்க!

‘தில்லுக்கு துட்டு 2’ விமர்சனம்

சந்தானம் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதே டீம் மீண்டும் இணைந்து உருவாக்கிய இந்த 'தில்லுக்கு துட்டு 2' படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம். மருத்துவமனையில் வேலை செய்யும்...

காப்பான் – சிறுக்கி ப்ராமோ வீடியோ

Movie – Kaappaan Song – Siriki Singer – Senthil Ganesh, Ramani Ammal

90ml அந்தமாதிரி படம் இல்ல

பிக்பாஸ் ஓவியா ஹீரோயினாக நடித்துள்ள 90ml, திரைப்படத்துக்கு ‘ஏ’ கிடைத்துள்ளது. இந்த படத்தின் டீசரை பார்த்து பிட்டு பட நடிகை போல் ஓவியா நடித்துவிட்டதாக அவரது ஆர்மி ரசிகர்கள் பதவி வருகிறார்கள். இந்நிலையில் ’90...

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

பொதுவாகவே பெண்களுக்கு உடல் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் காணப்படுகின்றது. அதில் ஒன்று சிறுநீரக பாதையில் தொற்று. பெரும்பாலான பெண்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். காரணங்களையும், தொற்று ஏற்படாமல் காக்கும் முறைகளையும் பார்ப்போம். தொற்று ஏற்பட காரணங்கள்: சிறுநீரை...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மேலும் இருவர் மரணம்

Two Climbers Died on Everest : இமய மலையின் எவரெஸ்ட் சிகரத்தைத் தொடும் முயற்சியில் மேலும் இருவர் உயிரிழந்துள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. உலகின் அதிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கு சுமார்...

முகப்பருக்களில் இருந்து விடுபட சிம்பிள் டிப்ஸ்!

ஆண்களின் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி, பரு பிரச்சனைகளை போக்க எளிய வழிமுறைகள். பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் சற்று கடினமானது தான். ஆனால், இதனை நம்மால் எளிதாக பருக்கள் இல்லாமலும், கரும்புள்ளிகள் இல்லாமலும்...

ஒரு நாள்… ஒரு ஆள்.. விஜய்சேதுபதி டப்பிங் வீடியோ

‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் ஒரு நாள்......

அடுத்தடுத்து கல்லா கட்ட காத்திருக்கும் ஜிவி

ஏப்ரல் 5ஆம் தேதி ஜிவி பிரகாஷ் நடித்த 'குப்பத்து ராஜா' திரைப்படம் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'வாட்ச்மேன்' திரைப்படம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக...

காஜலோடு கைகோர்க்கும் விஜய் சேதுபதி

தமிழில் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் என்றால் அது - விஜய்சேதுபதி தான். அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் சங்கத்தமிழன் படத்தின் படபிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது. காரைக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள...

உங்கள் மனைவியை ‘தூக்கி’ விளையாடுங்கள்

உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..! இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும்,...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you