ராகவா லாரன்ஸ் ஏற்கனவே நடித்து இயக்கிய காஞ்சனா, காஞ்சனா 2 ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது காஞ்சனா 3 வெளியாகவுள்ளது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் 2 பாகங்களை போலவே இப்படத்தில் காமெடி காட்சிகளும், பயங்கர திகில் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

இப்படத்தில் ஓவியா மற்றும் வேதிகா ஆகியோர் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் வீடியோவை படக்குழு
வெளியிட்டுள்ளது.