விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் இயக்குனர் அருண்குமார் இயக்கிய ‘சிந்துபாத் திரைப்படத்தின் ஒரு நிமிட டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

‘இங்க எல்லாருடைய வாழ்க்கையிலும் பிரச்சனை வருவது சகஜம் தான். பிரச்சனையை பார்த்து பயந்து ஓடி ஒளிஞ்சா, அது துரத்தும் நம்ம ஓடணும். அதே நம்ம திரும்பி நின்னு முறைச்சா, இவ்வளவு நேரம் நம்ம இவனைதான துரத்துனோம்னு வெக்கமே இல்லாம அது தலை தெறிக்க ஓடும். நம்ம ஓடணுமா? இல்ல ஓட விடணுமா? என்ற வசனங்களுடன் உள்ள இந்த டீசரின் காட்சிகள் இருந்தே இதுவொரு அதிரடி ஆக்சன் கதை என்பது தெரிய வருகிறது.

சேசிங், ஆக்சன், துப்பாக்கி சத்தம், குண்டுவெடிப்பு என ஆக்சன் ஒருபக்கம், யுவன்ஷங்கர் ராஜாவின் அட்டகாசமான பின்னணி இசை ஒருபக்கம் என படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் இந்த ‘சிந்துபாத்’ டீசர் உள்ளது. விஜய்சேதுபதிக்கு இன்னொரு வெற்றி திரைப்படம் காத்திருக்கின்றது